இந்தியா

பெட்ரோல், டீசல் விலை தொடர்ச்சியாக உயர்வு: சென்னையில் பெட்ரோல் ரூ.83.37; டெல்லியில் 2 ஆண்டுகளில் இல்லாத விலையை எட்டியது

பிடிஐ

தொடர்ந்து 20வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. தினம் தினம் கொஞ்சம் கொஞ்சமக அதிகரித்ததில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.8.87 அதிகரித்துள்ளது, டீசல் விலை ரூ.10.08 அதிகரித்துள்ளது.

2 ஆண்டுகளுக்கும் மேலாக டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு இப்படி உயர்ந்ததில்லை, பெட்ரோல் விலை டெல்லியில் இந்த உயர்வை அடுத்து ரூ.80-ஐக் கடந்தது.

எண்ணெய் நிறுவனங்கள் இன்று பெட்ரோல் விலையை லிட்டருக்கு 21 காசுகளும், டீசல் விலையை லிட்டருக்கு 17 காசுகளும் அதிகரித்தது. இதனையடுத்து டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.80.13 ஆகவும், டீசல் விலை ரூ.80.19 ஆகவும் அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று (ஜூன் 26), பெட்ரோல் லிட்டருக்கு 83.37 ரூபாய், டீசல் லிட்டருக்கு 77.44 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மும்பையில் பெட்ரோல் விலை ரூ.86.91 ஆகவும் டீசல் விலை ரூ.78.51 ஆகவும் அதிகரித்துள்ளது. பெட்ரோல் விலை 2 ஆண்டுகளில் இல்லாத விலை உயர்வை எட்ட, டீசல் விலையோ அனைத்து கால அதிக விலையை எட்டியுள்ளது.

இந்த விலை உயர்வினால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

SCROLL FOR NEXT