இந்தியா

ராணுவத்துடனான மோதலில் 3 தீவிரவாதிகள் பலி

பிடிஐ

மியான்மர் எல்லையையொட்டி மணிப்பூர் மாநிலத்தின் சன்டர் மாவட்டம் மொரே பகுதியில் நேற்று ராணுவத்துடன் நடந்த மோதலில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இவர்கள் எந்த தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதியாகவில்லை.

ராணுவம் - தீவிரவாதிகள் இடையே காலை 11 மணி அளவில் தொடங்கிய துப்பாக்கிச் சண்டை 90 நிமிடம் நீடித்ததாக அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.

மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில் எஞ்சியவர்கள் மியான்மருக்குள் தப்பிவிட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. தீவிரவாதிகளின் உடல்கள் மொரே காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.

SCROLL FOR NEXT