கோப்புப்படம் 
இந்தியா

மிகமிகக் குறைவுதான்: இந்தியாவின் கரோனா நோயாளிகளில் ; 7,423 பேருக்கு மட்டுமே வென்டிலேட்டர் சிகிச்சை தேவை:15 சதவீதம் பேருக்கு ஐசியு சிகிச்சை

பிடிஐ

இந்தியாவில் உள்ள 4.50 லட்சம் கரோனா நோயாளிகளில் 15.34 சதவீதம் பேருக்கு மட்டுமே தீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவமும்(ஐசியு), 15.89 சதவீதம் பேருக்கு மட்டுேம செயற்கை சுவாசமும், 4.16 சதவீதம் நோயாளிகளுக்கு மட்டுமே வென்டிலேட்டர் சிகிச்சையும் தேவைப்படுகிறது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

இந்தியாவில் நேற்றைய நிலவரப்படி கரோனா வைரஸ் தொற்றால் ஒட்டுமொத்தமாகப் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14 லட்சத்து 56 ஆயிரத்து 183 ஆக அதிகரித்துள்ளது.

இதில் 2 லட்சத்து 58 ஆயிரத்து 684 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 22 பேர் சிகிச்சையில் உள்ளனர். கரோனாவிலிருந்து மீள்வோர் சதவீதம் 56.71 ஆக உயர்ந்துள்ளது.

இதில் கரோனா வைரஸ் பாதிப்பு இரட்டிப்பு ஆகும் நாட்கள் ஜூன் 12-ம் வரை 17.4 நாட்கள் என்று இருந்த நிலையில் தற்போது அந்த காலம் அதிகரித்து 19.7 நாட்களாக நீண்டுள்ளது.

கடந்த 23-ம் தேதி நிலவரப்படி இந்தியாவில் கரோனாவில் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 15.34 சதவீதம் பேருக்கு அதாவது 27 ஆயிரத்து 317 பேருக்கு ஐசியு சிகிச்சைத் தேவைப்படுகிறது. 4.16 சதவீதம் பேர் அதாவது 7 ஆயிரத்து 423 பேருக்கு மட்டுமே வென்டிலேட்டர் சிகிச்சை தேவைப்படுகிறது

15.89 சதவீதம் நோயாளிகள் அல்லது 28 ஆயிரத்து 301 பேருக்கு மட்டுமே செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

இதில் சிகிச்சையில் இருக்கும் கரோனா நோயாளிகளில் ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 22 பேரில் 2.57 சதவீதம் பேர் மட்டுமே ஐசியு வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 0.54 சதவீதம் பேருக்கு மட்டுமே வென்டிலேட்டர் மூலம் சுவாசம் வழங்கப்பட்டு வருகிறது.

2.99 சதவீதம் பேருமட்டுமே ஆக்ஸிஜன் மூலம் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வருகிறது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

உலக சுகாதார அமைப்பின் கடந்த 22-ம் தேதி அறிக்கையின்படி, “ உலகிலேயே கரோனா வைரஸால் குறைவான உயிரிழப்பைக் கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் ஒரு லட்சம் பேருக்கு ஒரு சதவீதம் ேபர் மட்டுமே உயிரிழக்கின்றனர். ஆனால் இதுவே உலக சராசரி என்று 6 மடங்காக 6.04 சதவீதமாக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

SCROLL FOR NEXT