இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனா தொற்றால் ஏறக்குறைய 16 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 465 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து 5-வது நாளாக நாட்டில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14 ஆயிரத்துக்கும் அதிகமாக உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றால் 15 ஆயிரத்து 968 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாகப் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14 லட்சத்து 56 ஆயிரத்து 183 ஆக அதிகரித்துள்ளது. இதில் 2 லட்சத்து 58 ஆயிரத்து 684 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 22 பேர் சிகிச்சையில் உள்ளனர். கரோனாவிலிருந்து மீள்வோர் சதவீதம் 56.71 ஆக உயர்ந்துள்ளது.
கரோனா வைரஸ் தொற்றால் கடந்த 24 மணிநேரத்தில் 465 பேர் உயிரிழந்துள்ளதையடுத்து, ஒட்டுமொத்த உயிரிழப்பு 14 ஆயிரத்து 476 ஆக அதிகரித்துள்ளது. இதில் நேற்று மட்டும் அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 248 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் 68 பேர், தமிழகத்தில் 39 பேர், குஜராத்தில் 26 பேர், உத்தரப் பிரதேசத்தில் 19 பேர் பலியாகியுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் 11 பேர், ராஜஸ்தான், ஹரியாணாவில் 9 பேர், கர்நாடகா மற்றும் ஆந்திராவில் 8 பேர், பஞ்சாப் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் தலா 4 பேர், தெலங்கானாவில் 3 பேர், ஜம்மு காஷ்மீர், ஒடிசா, உத்தரகாண்டில் தலா 2 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளா, பிஹார், புதுச்சேரியில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.
இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
''மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 6,531 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த இடத்தில் உள்ள டெல்லியில் உயிரிழப்பு 2,301 ஆகவும், குஜராத்தில் உயிரிழப்பு 1,710 ஆகவும், தமிழகத்தில் பலி எண்ணிக்கை 833 ஆகவும் அதிகரித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் பலி எண்ணிக்கை 580 ஆகவும், மத்தியப் பிரதேசத்தில் உயிரிழப்பு 525 ஆகவும், உத்தரப் பிரதேசத்தில் பலி எண்ணிக்கை 588 ஆகவும், ராஜஸ்தானில் உயிரிழப்பு 365 ஆகவும் அதிகரித்துள்ளது.
தெலங்கானாவில் பலி எண்ணிக்கை 220 ஆகவும், ஹரியாணாவில் 178 ஆகவும், ஆந்திராவில் 119 ஆகவும் இருக்கிறது. கர்நாடகாவில் 150 பேரும், பஞ்சாப்பில் 105 பேரும் பலியாகியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் 87 பேரும், பிஹாரில் 56 பேரும், ஒடிசாவில் 17 பேரும், கேரளாவில் 22 பேரும், உத்தரகாண்டில் 30 பேரும் , இமாச்சலப் பிரதேசத்தில் 8 பேரும், ஜார்க்கண்டில் 11 பேரும், அசாமில் 9 பேரும் உயிரிழந்துள்ளனர்.
மேகாலயாவில் ஒருவர் உயிரிழந்துள்ளார். புதுச்சேரியில் 8 பேர் உயிரிழந்தனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 10 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 69,631 ஆக உயர்ந்துள்ளது.
அதைத் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ள டெல்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 66,602 பேராக அதிகரித்துள்ளது. 39,313 பேர் குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64 ஆயிரத்து 463 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 35,339 ஆகவும் அதிகரித்துள்ளது.
4-வது இடத்தில் உள்ள குஜராத்தில் 28,371 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 20,513 பேர் குணமடைந்தனர்.
ராஜஸ்தானில் 15,627 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 12,261 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 18,893 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் 14,728 பேரும், ஆந்திராவில் 10,002 பேரும், பஞ்சாப்பில் 4,397 பேரும், தெலங்கானாவில் 9,553 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் 6,236 பேர், கர்நாடகாவில் 9,721 பேர், ஹரியாணாவில் 11,520 பேர், பிஹாரில் 8,153 பேர், கேரளாவில் 3,451 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,809 பேர் குணமடைந்துள்ளனர்.
ஒடிசாவில் 5,470 பேர், சண்டிகரில் 418 பேர், ஜார்க்கண்டில் 2,185 பேர், திரிபுராவில் 1,259 பேர், அசாமில் 5,831 பேர், உத்தரகாண்டில் 2,535 பேர், சத்தீஸ்கரில் 2,362 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 775 பேர், லடாக்கில் 932 பேர், நாகாலாந்தில் 330 பேர், மேகாலயாவில் 46 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தாதர் நகர் ஹாவேலியில் 120 பேர், புதுச்சேரியில் 402 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் 165 பேர் குணமடைந்தனர். மிசோரத்தில் 142 பேர், சிக்கிமில் 79 பேர், மணிப்பூரில் 921 பேர், கோவாவில் 909 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அருணாச்சலப் பிரதேசத்தில் 148 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தமான் நிகோபர் தீவுகளில் 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்''.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.