இந்தியா

டெல்லி பாக். தூதரக ஊழியரை 50% ஆக குறைக்க வேண்டும்: மத்திய அரசு வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

இந்தியா - பாகிஸ்தான் இடையே தூதரக உறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டு பிறகு விடுவிக்கப்பட்டனர். பின்னர், இந்தியாவுக்கும் திருப்பி அனுப்பப்பட்டனர். இதற்குஇந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. இது இருதரப்பு உறவில் மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தானின் போக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் உளவு வேலையில் ஈடுபட்டு வருவதோடு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் இந்திய வெளியுறவுத்துறை சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்திய தூதரக அதிகாரிகள் மிரட்டப்படுவதோடு அவர்களை நடத்த வேண்டிய விதம் குறித்து ஒப்பந்தப்படி பாகிஸ்தான் நடக்காத நிலையில், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையை 50 சதவீதமாக குறைக்குமாறு இந்தியவெளியுறவுத்துறை வலியுறுத்தி உள்ளது.

இதேபோல, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் உள்ள 50 சதவீத ஊழியர்களை திரும்ப அழைத்துக் கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT