இந்தியா

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் : சிஆர்பிஎஃப் வீரர் பலி- 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஏஎன்ஐ

செவ்வாய்கிழமை (23-06-20) காலை காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பண்ட்ஜூ பகுதியில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் நடந்த சண்டையில் சிஆர்பிஎஃப் படை வீரர் ஒருவர் காயம் காரணமாக பலியானார், 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இது தொடர்பாக இந்திய ராணுவம் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது, “இதன் பெயர் பண்ட்ஜூ நடவடிக்கை (புல்வாமா), இன்று காலையில் இந்த நடவடிக்கையின் மூலம் தீவிரவாதிகளுக்கு எதிராக நடந்த என்கவுண்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஒரு சிஆர்பிஎஃப் வீரர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தார், இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், ஆனால் அங்கு இவர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார்.

2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து 2 ஏகே-47 ரகத் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. இன்று அதிகாலையில் நடந்த இந்த என்கவுண்ட்டர் சம்பவத்தையடுத்து இன்னமும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

போலீஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர் மேலும் தீவிரவாதிகள் மறைந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் தேடலை முடுக்கி விட்டுள்ளனர்.

இது தொடர்பான மேல் விவரங்கள் இனிதான் தெரியவரும்” என்று கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT