இந்தியா

தமிழக அரசு கோரிக்கை வைத்த பின்பும் தமிழுக்கு இடம் ஒதுக்காத அரசின் பிஎட் கல்வி நிறுவனம்

ஆர்.ஷபிமுன்னா

மவுலானா அபுல் கலாம் ஆசாத்தால் 1947-ல் டெல்லியில் தொடங்கப்பட்டது மத்திய அரசின் ஆசிரியர் கல்வியியல் (பிஎட்) நிறுவனம்.

பழம்பெரும் மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க ஆங்கிலம், உருது, இந்தி, சம்ஸ்கிருதம் தொடங்கிய பின் அதில் தமிழ்,பஞ்சாபி, பெங்காலி சேர்க்கப்பட்டன. டெல்லியின் சத்ரா மார்கிலுள்ள மிராண்டா கல்லூரிக்கு அருகில் அமைந்த இக்கல்வி நிறுவனத்தில் ஒவ்வொரு வருடமும் பொதுநுழைவுத்தேர்வின் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. இதில் சேர்க்கப்பட்டு வந்த தமிழுக்கான ஏழு மாணவர்களின் கல்வியியல் பிரிவு கடந்த2016-ம் ஆண்டு முதல் மூடப்பட்டது.

தமிழுக்கான மாணவர்கள் ஒதுக்கீடு வேறு பாடப்பிரிவுகளுக்கு மாற்றப்பட்டது குறித்த செய்தி, கடந்த பிப்ரவரி 20-ம் தேதி மற்றும்2019-ம் ஆண்டு மே 14 -ம் தேதிகளில் ‘இந்து தமிழ்’ நாளேட்டில் வெளியானது. இதையடுத்து தமிழக அரசு சார்பில் அக்கல்விநிறுவனத்துக்கு கடிதம் எழுதப்பட்டது. அதில், வரும் கல்வியாண்டு முதல் தமிழுக்கான பாடப்பிரிவை மீண்டும் தொடங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் அக்கல்வி நிறுவனம் சார்பில் மாணவர் சேர்க்கைக்கான விளம்பரம் வெளியாகி உள்ளது. ஆனால் அதில் தமிழுக்கான பாடப்பிரிவுக்கு இடம் ஒதுக்கப்படவில்லை.

டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் இந்த நிறுவனம்உயர்கல்வி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இதுபோன்ற, உயர்கல்வி நிறுவனத்தில் ஒரு பாடப்பிரிவாக தமிழ் போதிக்கப்படுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இதனால் டெல்லியில் வாழும் தமிழர்கள் கல்வியியல் பயில பல லட்சங்களை செலவு செய்துதமிழகத்தின் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு செல்லவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT