மிசோரம் மாநிலத்தில் நில நடுக்கம் ஏற்பட்ட நிலையில் அம்மாநில முதல்வர் ஷோரம்தங்காவை, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினர்.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரமில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவான இந்த நிலநடுதக்கத்தால் சாலைகளில் விரிசல்கள் ஏற்பட்டது. மக்கள் அச்சம் அடைந்து வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர்.
இதனைத் தொடர்ந்து மிசோரம் மாநிலத்தில் நில நடுக்கம் ஏற்பட்ட நிலையில் அம்மாநில முதல்வர் ஷோரம்தங்காவை பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினர்.
அங்குள்ள நிலைமையை கேட்டறிந்தனர். மத்திய அரசு தன்னாலான அனைத்து உதவிகளையும் வழங்கும் என்று நான் உறுதியளித்தேன் இருவரும் உறுதியளித்தனர்.
பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் மிசோரம் மாநில முதல்வர் ஷோரம்தங்கா நன்றி தெரிவித்தார்.