இந்தியா

56 இன்ச் 26 இன்ச் மார்பாகக் குறைந்து விட்டது : சீன விவகாரத்தில் மோடி மீது காங். எம்.பி. விமர்சனம் 

ஏஎன்ஐ

கல்வான் பள்ளத்தாக்கில் சீனத் தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் எய்திய விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு பரவலான எதிர்ப்புகள் வந்தவண்ணம் உள்ளன.

காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சரும், மாநிலங்களவை எம்.பியுமான அகிலேஷ் பிரசாத் சிங், பிரதமர் மோடியின் மீதான ராகுல் காந்தியின் விமர்சனத்தை ஆதரித்துப் பேசியுள்ளார்.

ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் அகிலேஷ் பிரசாத் சிங் கூறும்போது, “ராகுல் காந்தி கூறியதில் எந்தத் தவறும் இல்லை. ஒரு புறம் நம் ராணுவ வீரர் ஒருவர் பலியானால் 4 பாகிஸ்தான் ராணுவ வீரர்களைச் சுடுவோம் என்று கூறுகிறோம், இப்போது 20 ராணுவ வீரர்கள் சீனாவுடன் மோதலில் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். பிரதமர் மோடியின் 56 இன்ச் மார்பு 26 இன்ச் ஆகக் குறைந்து விட்டது.

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு தயாரிப்பு நிலை பற்றி தெரிந்திருக்கும். சீனா நம் வீரர்களைக் கொன்றிருப்பது துரதிர்ஷ்டவசமானது. நாம் தயார், தயார் என்று பிரதமர் ஒருபுறம் கூறுகிறார், ஆனால் சீனா நம் ஒட்டுமொத்த நாட்டையுமே காயப்படுத்தியுள்ளது. அரசு ஆக்ரோஷமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏற்கெனவே ராகுல் காந்தி இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை ‘சரெண்டர் மோடி’ என்று விமர்சித்துள்ள நிலையில் தற்போது காங்கிரசஸ் எம்.பி.யும் சாடியுள்ளார்.

SCROLL FOR NEXT