லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா- சீனா இடையே நிலவும் எல்லைப் பிரச்சினை தொடர்பான பிரதமர் நரேந்திர மோடியின் உரையை சீனாவின் பிரபல சமூக ஊடக செயலியான உய்சாட் நீக்கியுள்ளது.
அரசு ரகசியங்களை தெரிவிக்கக்கூடாது, தேச பாதுகாப்புக்கு ஆபத்து நேர விடக்கூடாது போன்றகாரணங்களால் இந்த பதிவுகளை நீக்கியதாக அந்த சமூக ஊடகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் அதிகாரப்பூர்வ கணக்கில் வெளியான இந்திய - சீன எல்லை நிலவரம் பற்றியமோடியின் கருத்துகள், இந்தியவெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், சீன வெளியுறவு அமைச்சர் இடையே வியாழக்கிழமை நடைபெற்ற தொலைபேசி வழிஉரையாடல், வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளரின் அறிக்கை ஆகியவற்றை உய்சாட் சமூகஊடகம் முன்னதாக வெளியிட்டிருந்தது.
கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலுக்குப் பிறகு இந்தப் பதிவுகளை திடீரென நீக்கியுள்ளது சீன சமூக ஊடகம்.
உய்சாட்டில் இந்திய தூதரகத்தின் அதிகாரப்பூர்வ கணக்கை பின்பற்றுவோர் உள்ளே சென்று பார்த்தபோது முரண்பாடு இருப்பதை கண்டறிந்தனர். உய்சாட்டில் இரு பதிவுகளை தேடியபோது அனுப்பியவர்களே அதை நீக்கிவிட்டதாக பதில் வந்தது. உண்மையில் இந்தப் பதிவுகளை இந்திய தூதரகம் நீக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.