கரோனா வைரஸ் விவகாரம் மற்றும் சீனா எல்லையில் அத்துமீறல் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு மீது முன்னாள் ஐக்கிய ஜனதாதளத் தலைவரும் தேர்தல் யுக்தியாளருமான பிரசாந்த் கிஷோர், மோடி தலைமை மத்திய அரசு மீது கடும் விமர்சனங்களைத் தொடுத்தார்.
ஐக்கிய ஜனதாதளம் இவரை நீக்கியதிலிருந்தே இவர் பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரையும் மத்திய அரசையும் தாக்கி பேசிவருவது வாடிக்கையாகி வருகிறது.
இந்நிலையில் கரோனா வைரஸைக் கையாளும் விதம், சீனாவுக்கு எதிரான மோதல் போக்கு விவகாரங்கள் குறித்து மத்திய அரசை அவர் விமர்சிக்கும் போது தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
“ஆம் 21 நாட்களில் கரோனாவுக்கு எதிரான போரில் வென்று விட்டோம்.. அதே போல் சீனாவிலிருந்து யாரும் சண்டையிட வரவில்லை... இப்போது மீதமிருப்பது பொருளாதார வளர்ச்சி இதை அரசு தரவுகளைக் கையாள்பவர்கள் பார்த்து திருத்தி அமைப்பார்கள்... கவலைப்பட வேண்டியதில்லை... அரசு கூறுவது போல் அனைத்தும் ஓகே. இன்னும் என்ன?..தற்சார்பு எய்த தேர்தல் பிரச்சாரங்களுடன் தொடர்பிலிருங்கள், பொய் அரசு” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், பிஹாரில் நாட்டிலேயே குறைந்த அளவு கரோனா பரிசோதனை நடைபெறுகிறது, மாதிரிகள் சோதனைகள் போதிய அளவில் இல்லை, ஆனால் மாநில அரசில் தேர்தல்தான் பேச்சாக இருக்கிறது, கரோனா இல்லை.
கோவிட்-19-க்குப் பயந்து நிதிஷ் குமார் வீட்டை விட்டு 3 மாதங்களாக வெளியே வரவில்லை, ஆனால் தேர்தலில் இவர்களுக்கு வாக்களிக்க மக்கள் வெளியே வரலாம். இது எப்படி?, என்று நிதிஷ் குமாரையும் விட்டு வைக்காமல் சாடினார் பிரசாந்த் கிஷோர்.