இந்தியா

சீன ஆக்ரோஷத்துக்கு இந்தியப் பகுதியை ஒப்படைத்து விட்டார் மோடி : ராகுல் காந்தி கடும் விமர்சனம்

பிடிஐ

இந்தியப் பகுதிக்குள் சீனர்கள் நுழையவில்லை, எந்த ஒரு பகுதியும் கைப்பற்றப்படவில்லை என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியதையடுத்து ராகுல் காந்தி பிரதமர் மோடி மீது தன் சமூக வலைத்தளத்தில் கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.

அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “பிரதமர் இந்தியப் பகுதியை சீன ஆவேசத்துக்கு ஒப்படைத்து விட்டார். அந்த நிலப்பகுதி சீனாவுடையது என்றால் 1. ஏன் நம் வீரர்கள் கொல்லப்பட வேண்டும்? 2. எங்கு அவர்கள் கொல்லப்பட்டார்கள்?” என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

அனைத்துக் கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அரசு இந்தச் சூழ்நிலையைக் கையாண்ட விதம் குறித்து விமர்சனம் செய்தார். உளவுத்துறை தோல்வியா? இப்போது இந்த நேரம் வரையில் கூட நெருக்கடியின் முக்கிய அம்சங்கள் குறித்து எங்களுக்கு ஒன்றும் தெரிவிக்கப்படவில்லை என்று சோனியா கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன

SCROLL FOR NEXT