கோப்புப் படம் 
இந்தியா

கர்நாடக எல்லைக்குள் நுழைந்த தமிழர்கள் மீது தடியடி: ஓசூர் எல்லையில் பரபரப்பு

செய்திப்பிரிவு

கர்நாடக மாநிலத்தில் கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கேரள மாநில எல்லைகளை அம்மாநில அரசு மூடியுள்ளது. தற்போது கர்நாடகாவில் ஊரடங்குவிதிமுறைகள் பெரும்பாலும் தளர்த்தப்பட்டு, இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது.

இதனால் தனியார் நிறுவனங்களும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் செயல்பட தொடங்கியுள்ளன. மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து சேவைதொடங்காததால், அதில் பணியாற்றும் ஊழியர்கள் பெங்களூரு திரும்பி வருகின்றனர். இந்நிலையில், கர்நாடக அரசு, ''வெளிமாநிலத்தில் இருந்து வருவோர் ‘சேவா சிந்து' செயலியில் பதிவுசெய்ய வேண்டும். அதில் ஒப்புதல் கிடைத்த பின்னர் வருவோர் 3 நாட்கள் அரசு கண்காணிப்பு மையத்தில் தனிமைப்படுத்தப்படுவார்கள்'' என அறிவித்தது.

இந்நிலையில் நேற்று ஓசூரில் எல்லையான ஜூஜூவாடியில் இருந்து கர்நாடக எல்லையான அத்திப்பள்ளிக்கு நடந்து சென்றவர்களை பெங்களூரு போலீஸார் எச்சரித்து தமிழக எல்லைக்கு விரட்டி விட்டனர். அப்போது பொதுமக்களுக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, போலீஸார் லேசான தடியடி நடத்தினர். சேவா சிந்துசெயலியில் பதிவு செய்து அனுமதிகிடைத்தவர்களை மட்டுமே கர்நாடக எல்லைக்குள் அனுமதிப்போம் என தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT