உத்தரப் பிரதேச மாநில கரும்பு விவசாயிகள் 47.20 லட்சம் பேருக்கு 2017-2020-ல் விலையாக ரூ. 1 லட்சம் கோடிக்கும் மேல் கொடுத்திருக்கிறோம் என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பெருமை பொங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறும்போது, “2014-17 காலக்கட்டத்தில் விவசாயிகளுக்கு விலையாக அளித்த ரூ.53,367 கோடியை விட கடந்த 3 ஆண்டுகளில் கரும்பு விவசாயிகளுக்கு அளித்த தொகை ரூ.46,633 கோடி அதிகம்.
ரூ.2012-2017 காலக்கட்டத்தில் கரும்பு விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட விலையான ரூ. 95,215-ஐ விட ரூ.4,785கோடி அதிகம்.
கரோனா பெருந்தொற்றினால் வர்த்தகங்கள், கடைகள் மூடப்பட்டு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டாலும் சர்க்கரை ஆலைகள் செயல்பட்டன. விவசாயிகள் நலன் கருதியே கரும்பு சப்ளை தொய்வில்லாமல் இருக்குமாறு பார்த்துக் கொண்டோம்.
இந்த 2019-20-ல் உ.பி. சர்க்கரை ஆலைகள் 1,116 லட்சம் டன்கள் கரும்புகளிலிருந்து 126.5 லட்சம் டன்கள் சர்க்கரை உற்பத்தி செய்துள்ளது. இதுதான் உ.பி. வரலாற்றில் அதிகமான சர்க்கரை உற்பத்தியாகும்.” என்றார் யோகி ஆதித்யநாத்.