இந்தியா

சீன பிரதமர் கிம் ஜோங் உன்? சீன அதிபருக்கு பதிலாக வடகொரிய அதிபர் உருவ பொம்மை எரிப்பு: பாஜக தொண்டர்கள் மீது நெட்டிசன்கள் கடும் கேலி

செய்திப்பிரிவு

லடாக் கல்வான் பள்ளத்தாக்கு சண்டையில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் சீனாவுடனான மோதலில் பலியானதையடுத்து மேற்கு வங்க பாஜக தொண்டர்கள் சிலர் சீனாவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறேன் என்று கடைசியில் வடகொரிய அதிபர் கிம் உருவ பொம்மையை எரித்தது சமூக ஊடகங்களில் வைரலாக, பாஜக மீது நெட்டிசன்கள் கடும் கேலிகளை கட்டவிழ்த்து விட்டு வருகின்றனர்.

அசனால் பகுதியில் பாஜக தொண்டர்கள் சிலர் ‘சீனாவைப் புறக்கணிப்போம்’ என்று கோஷமிட்டுக்கொண்டே வடகொரிய அதிபர் கிம் ஜிங் உன் உருவபொம்மையை எரித்த தமாஷ் நிகழ்வு நடந்தது. இந்த வீடியோ வைரலாக இணையவாசிகள் பலரும் பாஜகவை கடுமையாகக் கேலி செய்து வருகின்றனர்.

“சீன பிரதமர் கிம் ஜோங் உன் உருவபொம்மையை எரிக்கிறோம்” என்று சீன அதிபர் ஜின்பிங் என்பது தெரியாமல் கூறியதும் அதிபருக்கும் பிரதமருக்கும் இருக்கும் வேறுபாடும் தெரியாமலும் அறியாமையில் இருப்பதாக பாஜக தொண்டர்களின் தன்மை குறித்து நெட்டிசன்கள் கடும் கிண்டலில் இறங்கியுள்ளனர்.

காமெடியன் வீர் தாஸ், “Kim Jong = snapdeal. Bhakt Logic,” என்று கிண்டல் செய்துள்ளார். பலரும் “எப்படி இவ்வளவு முட்டாள்களாக, முட்டாள் தனமாக...” என்று ட்விட்டரில் கேலி செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT