இந்தியா

ராகுல் தலைமையில் தேர்தலை எதிர்கொள்வோம்: மனிஷ் திவாரி

செய்திப்பிரிவு

பிரதமர் பதவிக்கு தயார், என ராகுல் காந்தி மனம் திறந்து தெரிவித்துள்ள நிலையில், ராகுல் காந்தி தலைமையின் கீழ் 2014- மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள விரும்புகிறோம் என மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சர் மனிஷ் திவாரி தெரிவித்துள்ளார்.

மேலும், ராகுல் காந்தி ஒரு இயல்பான தலைவர் என்றும், இதனை காங்கிரஸ் கட்சி பலமுறை தெரிவித்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இருப்பினும், கட்சியில் யாருக்கு எந்த பொறுப்பு கொடுக்க வேண்டும் என்ற முடிவு கட்சி மூத்த தலைவர்களுடனான தகுந்த ஆலோசனைக்குப் பின்னர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியால் தான் எடுக்கப்படுகிறது என்றார்.

தேசத்தை ஒருங்கிணைப்பதில் அவுரங்ஜீப்பை காட்டிலும் அசோகரும், அக்பரும் சிறப்பாக செயல்பட்டதாக ராகுல் காந்தி தெரிவித்திருந்த கருத்து நரேந்திர மோடி மீதான மறைமுக தாக்குதலா என்ற கேள்விக்கு பதிலளித்த மனிஷ் திவாரி: " இதில் மறைமுகமாக சொல்வதற்கு ஒன்றும் இல்லை. குஜராத் முதல்வர் மோடியின் ஆட்சி குறுகிய கண்ணோட்டத்துடனானது, மதவாதம், பிரிவினைவாதம் நிறைந்தது. 2002.ல் குஜராத்தில் என்ன நடந்தது என்பதை யாரும் மறைக்க முடியாது. அந்த வகையில் ராகுல் கருத்து மிகவும் பொருத்தமானவையே" என்றார்.

SCROLL FOR NEXT