சர்வதேச யோகா தினம் வரும் ஜூன் 21ம் தேதி அனுசரிக்கப்படுகிறது, இந்தத் தினத்தையொட்டி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.
இது அரசு தொலைகாட்சியான தூர்தர்ஷன் மற்றும் பிற டிஜிட்டல் தளங்களில் காலை 6.30 மணிக்கு நேரடி ஒளிபரப்பப்படும்.
பிரதமர் மோடியின் பரிந்துரையை ஏற்று 2015ம் ஆண்டு ஐநா ஜூன் 21ம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்தது.
அதுமுதல் நாட்டின் பல்வேறு யோகா நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்று வருகிறார். தன் யோகாசன வீடியோக்களையும் அவர் வெளியிட்டு வருகிறார்.
ஆண்டுதோறும், சர்வதேச யோகா தினத்தன்று பிரதமர் மோடி யோகா தின பயிற்சியில் கலந்து கொண்டு உரையாற்றி வருகிறார். ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள பிரபாத் தாரா மைதானத்தில் நடைபெற்ற யோகா தின பயிற்சியில் கடந்த வருடம் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார்.
இந்நிலையில், சர்வதேச யோகா தினமான ஜூன் 21-ம் தேதி நாட்டு மக்களுடன் டெல்லியில் இருந்தப்படி பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார். அப்போது, யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து விளக்கவுள்ளார்.