இந்தியாவுக்குள் சீன வீரர்கள் ஊடுருவி 7 வாரங்கள் ஆகிவிட்டநிலையில் அது குறித்து வாய்திறக்காத குடியரசுத் தலைவரோ, பிரதமரோ வேறு நாட்டில் யாராவது உள்ளார்களா என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி சாடியுள்ளார்
கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளாதாக்குப் பகுதியில் திங்கள்கிழமை இரவு இந்திய, சீன ராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவத்தினர் உயிரிழந்ததாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, சீன ராணுவம் தரப்பில் 43 பேர்வரை உயிரிழப்பு, காயமடைந்திருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கிறது. இதனால் இரு நாட்டு எல்லைகளிலும் பெரும்பதற்றம் நீடிக்கிறது 45 ஆண்டுகளுக்குப்பின் இந்தியா-சீனா ராணுவ மோதலில் முதல்முறையாக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
இது சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சருமான ப.சிதம்பரம் ட்விட்டரில் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
சீன ராணுவத்தினர்கள் இந்திய நிலப்பரப்பில் ஊடுருவி 7 வாரங்கள் ஆகிவிட்டன. ஆனால் இந்தியப் பிரதமர் இது வரை வாய் திறந்து ஒரு வார்த்தை சொல்லவில்லை இது போன்று வாய் திறக்காத பிரதமரோ, குடியரசுத் தலைவரோ உலகில் வேறு நாட்டில் யாராவது உள்ளார்களா?
இந்திய படை வீரர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். எத்தனை வீரர்கள்? அவர்கள் பெயர்கள் என்ன? எந்த மாநிலங்களைச் சார்ந்தவர்கள்? எந்தத் தகவலையும் அரசு இதுவரை அதிகார பூர்வமாகத் தெரிவிக்கவில்லை, ஏன்?. அதில் ஒருவீரர் தமிழகத்தின் ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்தது” எனத் தெரிவித்துள்ளார்
ப.சிதம்பரம் நேற்று இரவு பதிவி்ட்ட மற்றொரு ட்விட்டில் “ பாதுகாப்புத்துறை அமைச்சகம், ராணுவத் தலைமையகத்திடம் இருந்து விளக்கத்தை தேசத்தின் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இரவுக்குள் முழுமையான விளக்கம் வருமா?
கடந்த ேம 5-ம் தேதியிலிருந்து பிரதமர் மவுனம் காப்பது கவலையளிக்கிறது. இந்திய எல்லைக்குள் அன்னியப்படைகள் ஊடுருவி 7 வாரங்கள் ஆகியும் அரசின் தலைமைப்பதவியில் இருப்போர் ஒருவார்த்தைகூட பேசாமல் இருப்பதை நினைத்துப்பார்க்க முடியுமா” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்