இந்தியா

கள்ளச் சந்தையில் டீசல் விவகாரத்தை விசாரித்து வந்த போலீஸ் ட்ராக்டர் ஏற்றி கொலை?- 5 பேர் கைது

ஏஎன்ஐ

மத்தியப் பிரதேச மாநிலம் பாத்ரா கிராமத்தில் டீசல் கள்ளச்சந்தை விவகாரத்தை விசாரித்து வந்த கான்ஸ்டபிள் ஒருவர் ட்ராக்டரில் சக்கரத்தில் சிக்கி பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் ஜூன் 15ம் தேதி நடந்தது. 5 பேரை இது தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரி ரியாஸ் இக்பால் கூறும்போது, “இது தொடர்பாக தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.10,000 பரிசு. ட்ராக்டரில் அடிபட்டு இறந்த போலீஸ் சாலை விபத்தில் இறந்ததாகக் கூறிய நயாகன் போலீஸ் நிலைய அதிகாரி ஆஷிச் துருவே பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

குற்றவாளியைப் பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT