இந்தியா

காய்ச்சல், மூச்சுத் திணறல்: டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் மருத்துவமனையில் அனுமதி

செய்திப்பிரிவு

காய்ச்சல், மூச்சுத் திணறல் ஏற்பட்டதன் காரணமாக டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சத்யேந்தர் ஜெயினுக்கு இன்று கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோருடன் சத்யேந்தர் ஜெயின் 2 நாட்களுக்கு முன்பாக கரோனா குறித்த நிலவரங்களுக்காக சந்திப்பு மேற்கொண்டார்.

இது தொடர்பாக சத்யேந்தர் ஜெய்ன் இன்று காலை பதிவிட்ட ட்வீட்டில், “கடந்த இரவு நல்ல காய்ச்சல் மற்றும் திடீரென பிராணவாயு அளவு குறைவு காரணமாக ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். அவ்வப்போது நிலை குறித்த விவரங்களை வெளியிடுவேன்” என்று பதிவிட்டார்.

கடந்த வாரம் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வீட்டில் தன்னைத்தனிமைப் படுத்திக் கொண்டார், ஆனால் அவருக்கு கரோனா பரிசோதனையில் நெகெட்டிவ் என்று வந்தது அவருக்கு நிம்மதிப் பெருமூச்சை அளித்துள்ளது.

42,000த்திற்கும் மேற்பட்ட கோவிட்-19 தொற்று நோயாளிகளுடன் டெல்லி 3வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT