இந்தியா

8 கோடி விவசாயிகளுக்கு ரூ.16,390 கோடி ஒதுக்கீடு: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தகவல்

செய்திப்பிரிவு

நாடு முழுவதும் உள்ள 8 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளின் நலனுக்காக ரூ.16,390 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாக மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக தொழில் துறை முழுமையாக முடங்கியதால் சிறு-குறுதொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மேலும், நாட்டின் பொருளாதாரத்திலும் இதுபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இதனிடையே, சரிவடைந்த பொருளாதாரத்தை மீட்பதற்காக ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்புத் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் அறிவித்தார். அதன்படி, நாட்டில்உள்ள பல்வேறு தொழில் துறைகளுக்கும் இந்த தொகையானது பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த மே 30-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் மட்டும், நாட்டில் உள்ள சுமார் 8 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளின் நலனுக்காக ரூ.16 ஆயிரத்து 390 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானில் நேற்று முன்தினம் காணொலி காட்சி மூலமாக நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார்.

SCROLL FOR NEXT