பிஹார் மாநிலத்தின் மேலவையில் உள்ள ஒன்பது உறுப்பினர்களின் பதவிக்காலம் இந்த ஆண்டு மே 6-ம் தேதியன்று நிறைவு பெற்றது.
கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட எதிர்பாராத சூழலால் தேர்தல் ஆணையம் பிந்தைய தேதியில், நிலைமையைப் பரிசீலித்து தேர்தல் நடத்தப்படும் என்று முன்னதாக அறிவித்திருந்தது.
தற்போது பிஹார் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரியை கலந்தாலோசித்த பின்னர், மேலவைக்கான தேர்தலை நடத்துவதென ஆணையம் தீர்மானித்துள்ளது.
இதற்கான குறிப்பாணை இம்மாதம் 18-ம் தேதி வெளியிடப்படும் என்றும் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் இம்மாதம் 25 என்றும், வாக்குப்பதிவு ஜூலை 6-ம் தேதி நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை ஜூலை 6 அன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுபோலவே ஆந்திரப்பிரதேச மேலவையில் காலியாக உள்ள உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. மேலவை உறுப்பினராக இருந்த திரு டோக்கா மனிக்கியா வரப்பிரசாத் இந்த ஆண்டு மார்ச் 9-ம் தேதி பதவி விலகியதையடுத்து, அந்த காலியிடத்திற்கான இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
தேர்தல் குறிப்பாணை இம்மாதம் 18-ம் தேதி வெளியிடப்படும் என்றும், வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் இம்மாதம் 25 என்றும், வாக்குப்பதிவு ஜூலை 6-ம் தேதி நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை ஜூலை 6 அன்று மாலை ஐந்து மணிக்கு நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.