இந்தியா

மகாராஷ்ட்ராவில் தனியார் கரோனா சோதனை மையங்களில் கட்டணம் குறைப்பு: மாநில அரசு உத்தரவு

ஜோதி ஷில்லர்

மகாராஷ்ட்ராவில் தனியார் கரோனா சோதனை மையங்களில் கட்டணம் ரூ.4,500 என்பதிலிருந்து ரூ.2,800 ஆகக் குறைக்க மகாராஷ்ட்ரா அரசு உத்தரவிட்டுள்ளது.

அதாவது வீட்டிலிருந்து சேகரிக்கப்படும் மாதிரிகளுக்கான சோதனை மீதான கட்டணங்கல் கிட்டத்தட்ட பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளிலிருந்து சேகரிக்கப்பட்ட சாம்பிள்களுக்குக் கட்டணம் அதே ரூ.2,200 என்பதாகவே உள்ளது.

கட்டணங்களைக் குறைக்குமாறு பலரும் கோரிக்கை வைத்ததால் குறைக்கப்பட்டதாக சுகாதார அமைச்சர் ராஜேஷ் தோப் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறும்போது சோதனைக் கருவிகளும் பரவலாக கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன, இதன் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளது என்றார். மேலும் தனியார் சோதனை மையங்கள் இந்தக் காலக்கட்டத்தில் லாபநோக்கத்தை குறிக்கோளாகக் கொள்ளக் கூடாது என்றார்.

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் இதுவரை 6.2 லட்சம் மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன. இதில் மும்பையில் மட்டும் 2.4 லட்சம் மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன. மகாராஷ்ட்ராவில் மொத்தம் 95 பரிசோதனை மையங்கள் உள்ளன, இதில் 53 அரசு பரிசோதனை மையங்கள் 42 தனியாருக்குச் சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT