திருப்பதி சேஷாசலம் வனப்பகுதி யில் இருந்து விலைமதிப்பு மிக்க செம்மரங்களை வெட்டி வெளிநாடு களுக்கு கடத்தும் கும்பலுக்கு எதிராக ஆந்திர போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்து செம்மர வியாபாரிகளை போலீஸார் கைது செய்துள்ளனர். சீனா, மலேசியா நாடுகளை சேர்ந்த செம்மர வியாபாரிகளும் இதில் அடங்குவர்.
இந்நிலையில், கடப்பா போலீஸார் டெல்லியில் முகாமிட்டு, அங்குள்ள பிரபல செம்மர கடத்தல் வியாபாரியான பத்ருல் ஹசன் என்ப வரை நேற்று காலை கைது செய்தனர்.
இவர் பதுக்கி வைத்திருந்த ரூ.16 கோடி மதிப்புள்ள செம்மரங் களை பறிமுதல் செய்தனர். பத்ருல் ஹசனை ரயில் மூலம் கடப்பாவுக்கு அழைத்து வருகின்றனர்.