கோப்புப் படம் 
இந்தியா

எந்தெந்தப் பகுதிகளில் வெள்ளம் வரும்; 3  நாட்களுக்கு முன்பே கணிக்கும் அதிநவீன தொழில்நுட்பம்: மும்பையில் அறிமுகம் 

செய்திப்பிரிவு

மும்பைக்கான அதிநவீன ஒருங்கிணைந்த வெள்ள எச்சரிக்கை முறையை மும்பை மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் மத்திய புவி அறிவியல் அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர்.

குறிப்பாக அதிக மழைப் பொழிவு மற்றும் சூறாவளிகளின் போது வெள்ளம் ஏற்படுவதற்கான ஆரம்ப எச்சரிக்கையை வழங்குவதன் மூலம் நகரத்தை மேலும் பாதுகாப்பாக வைத்திருக்க இந்த அமைப்பு உதவும். இதைப் பயன்படுத்தி, 3 மணி நேரம் முதல் 6 மணிநேரம் வரையான உடனடி வானிலை அறிக்கைகளுடன் (Nowcast), வெள்ளப் பெருக்கு குறித்த மதிப்பீட்டை 3 நாட்களுக்கு முன்னதாகத் தெரிந்து கொள்ளமுடியும் என்பதால் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக தாழ்வான பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்ற வேண்டியிருந்தால், ஒரு குறிப்பிட்ட இடம் வெள்ளத்தில் மூழ்கக்கூடும் என்று 12 மணி நேரத்திற்கு

முன்பே கணிக்கமுடியும். ஒவ்வொரு பகுதிகளிலும் மழைப்பொழிவின் அளவை இந்த அமைப்பு முன்கூட்டியே அறிவிக்கும்.

காணொலி காட்சி மூலம் தனது சிறப்பு உரையில், மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன், வெள்ள எச்சரிக்கை முறையை உருவாக்கிய புவி அறிவியல் அமைச்சகத்தின் (MoES) விஞ்ஞானிகளை வாழ்த்தியதுடன் அறிவியலின் அடிப்படையில் உலகம் முழுவதிலும் உள்ள வேறு விஞ்ஞானிகள் எவருக்கும் நாம் குறைந்தவர் இல்லை என்று தெரிவித்தார். “மும்பை வெள்ளம், குறிப்பாக 2005 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் ஏற்பட்டது அனைவரின் நினைவிலும் நீங்கா இடம் பெற்றுள்ளது. மிகவும் மேம்பட்ட இந்த வெள்ள எச்சரிக்கை அமைப்பு மும்பை மக்களுக்கு பெரிய அளவில் உதவும். இதேபோன்ற அமைப்பு ஏற்கெனவே MoES ஆல் உருவாக்கப்பட்டு, சென்னையில் செயல்பட்டு வருகிறது.”

ஹர்ஷ் வர்தன் மேலும் கூறுகையில், உலகத்தரத்துக்கு இணையாக சுனாமிக்கு சிறந்த ஆரம்ப எச்சரிக்கை முறையை MoES விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர், மேலும் எந்த ஒரு நெருக்கடியிலும் ஒருபோதும் இந்த அமைப்பு தவறான எச்சரிக்கை கொடுக்கவில்லை. இந்த சேவை இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அதிக பயன் பெறும் நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

அறிவியலைப் பொறுத்தவரை உலகம் முழுவதிலும் நாம் வேறு எவரையும் விட குறைந்தவர் இல்லை என ஹர்ஷ் வர்தன், புவி அறிவியல் அமைச்சகத்தின் விஞ்ஞானிகளை வாழ்த்தினார்.

எந்தெந்தப் பகுதிகளில் வெள்ளம் வரும் என்பதை மூன்று நாட்களுக்கு முன்பே மதிப்பிட முடியும். முடிவெடுக்கும் அமைப்பு ஆபத்து மதிப்பீட்டின் அடிப்படையில் சுறுசுறுப்பான முடிவெடுப்பதுடன் கள நடவடிக்கைக்கு உதவும்.

புவி அறிவியல் அமைச்சகம் உருவாக்கிய அதி நவீன வெள்ள எச்சரிக்கை அமைப்பு மும்பைக்காரர்களுக்கு ஒரு பரிசு என நிகழ்ச்சியில் பேசிய உத்தவ் தாக்கரே கூறினார்.

SCROLL FOR NEXT