இந்தியா

ஓயாத வெட்டுக்கிளிகளின் அட்டகாசம்: உ.பி. பிரயாக்ராஜில் பயிர்கள் நாசம்

ஏஎன்ஐ

கரோனா காலத்தில் கடும் பிரச்சினைகளை அரசுகளும் மக்களும் சந்தித்து வரும் நிலையில் வெட்டுக்கிளிகளின் அட்டகாசம் ஓய்ந்தபாடில்லை.

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நுழைந்த பாலைவன வெட்டுக்கிளிகள் பயிர்களை நாசம் செய்தது. மேலும் நகருக்குள்ளும் நுழைந்து பசுமை இடங்களையும் அழித்தது.

உள்ளூர்வாசி சோனம் தேவி ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, “நான் வீட்டை விட்டு வெளியே வந்தால் வெட்டுக்கிளிகள் படை. பட்டாசுகளை வெடித்து அவை விரட்டப்பட்டன.

திடீர் வெட்டுக்கிளிகள் படையெடுப்பினால் பெரும் பரபரப்பும் குழப்பமும் ஏற்பட்டது. நாங்கள் பட்டாசுகளை வெடித்தும், பாடல்களை அலற விட்டும் அவற்றை விரட்ட முயற்சி செய்தோம். வெட்டுக்கிளிகள் தொல்லை அதிகமாகி வருகிறது” என்றார்.

பாலைவன வெட்டுக்கிளிகளால் கோடை காலத்தில் இந்தியாவுக்கு ஆபத்து என்று முன்பே கணிக்கப்பட்டது. இது தன் வழியில் இருக்கும் அனைத்து பயிர்கள், பசும் புல்வெளிகள், காய்கள், கனிகள் என்று அனைத்தையும் சேதம் செய்து விடும்.

இதனால் இந்தியாவில் உணவுப்பொருட்கள் பெரிய அளவில் நாசமடையும் என்றும் லட்சக்கணக்கானோர் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று ஏற்கெனவே கூறப்பட்டதற்கேற்ப தற்போது ஆங்காங்கே வெட்டுக்கிளிகள் படையெடுப்பு நடந்து வருகிறது.

SCROLL FOR NEXT