லாலு ஊழலைக் கிண்டல் செய்து போஸ்டரில் பட்டியல். 
இந்தியா

லாலுவுக்கு 73வது பிறந்த தினம்: ஊழலில் சேர்த்ததாக  73 சொத்துக்கள் பட்டியலை போஸ்டராக வெளியிட்டு கிண்டல்

ஏஎன்ஐ

பிஹாரில் ராஷ்ட்ரிய ஜனதாதளத்தின் தேஜஸ்வி யாதவ், பாஜக மீதும் முதல்வர் நிதிஷ் குமார் மீதும் கடும் விமர்சனங்களை முன்வைத்துத் தாக்கிப் பேசி வருகிறார்.

மேலும் பிஹாரில் தேர்தல் ஜுரம் பிடித்துள்ளதால் பெரும் அரசியல் தலைவர்கள் அங்கு மெய்நிகர் பேரணியைத் தொடங்கியுள்ளனர், அமித் ஷா அன்று மெய்நிகர் கூட்டத்தில் பேசினார், அதே தினம் சமையல் பாத்திரங்களை ஓசையெழுப்பி ராஷ்ட்ரிய ஜனதாதளம் அமித் ஷா பேரணிக்கு எதிர்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில் பிஹார் மூத்த தலைவரும், ஊழல் வழக்கில் சிறையிலிருப்பவருமான லாலு பிரசாத் யாதவ்வின் 73ம் பிறந்த தினத்தையொட்டி ராஷ்ட்ரிய ஜனதாதளத் தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து போஸ்டர் வைத்து வரும் நிலையில் லாலுவை கேலி செய்யும் விதமாக ஆளும் ஐக்கிய ஜனதாதளம் போஸ்டர்களை வைத்து வருகிறது.

இதில் ஒரு போஸ்டரில் லாலுவும் அவரது குடும்பத்தினரும் சேர்த்த 73 சொத்துக்களின் பட்டியலை முழுதும் வெளியிட்டது ஐக்கிய ஜனதாதளம். அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி இவ்வளவு சொத்துக்களா என்று அதில் கேலி செய்யப்பட்டுள்ளது. அதாவது அவர் வயதும் 73, சேர்த்த சொத்துக்களின் பட்டியலிலும் 73 சொத்துக்கள் காட்டப்பட்டுள்ளது.

மேலும், அதே போஸ்டரில், அரசியல் பலப்பிரயோகத்திலா சேர்த்த சொத்துக்களின் பட்டியல் இது.. இந்தப் பட்டியல் இன்னும் நீளம் என்று வாசகமிட்டுள்ளது.

பிஹார் எப்போதும் இது போன்ற போஸ்டர் யுத்தங்களுக்குப் பெயர் பெற்றது.

SCROLL FOR NEXT