லடாக்கில் உள்ள சீன எல்லைப் பகுதிக்கு அருகே இந்தியா சார்பில் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, லடாக் எல்லையில் இரு நாட்டு ராணுவ வீரர்கள் இடையே கடந்த மாதம் லேசான மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்றுதனது ட்விட்டர் பக்கத்தில், “லடாக்கில் உள்ள இந்தியப் பகுதிகளை சீனா கைப்பற்றிவிட்டது. ஆனால், இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மவுனம் காத்து வருகிறார்” என கூறியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக லடாக் தொகுதி பாஜக எம்.பி. ஜம்யாங் செரிங் நம்யால்தனது ட்விட்டர் பக்கத்தில், "லடாக்கில் இந்தியாவுக்கு சொந்தமான பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டது உண்மைதான். ஆனால்,அது 1962-ம் ஆண்டு காங்கிரஸ்ஆட்சிக்காலத்தின் போது நடைபெற்றது. அந்தக் காலகட்டத்தில்தான், கிழக்கு லடாக்கின் அக்சய்சின் பகுதியில் உள்ள 38 ஆயிரம்சதுர கி.மீ. பகுதிகளை சீனா கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து,காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பல்வேறு சமயங்களில் இதுபோன்றஆக்கிரமிப்புகள் நடைபெற்றிருக்கின்றன. எனது ஆதாரப்பூர்வமான பதிவை ராகுல் காந்தி ஏற்றுக்கொண்டு இனிமேலாவது தவறான தகவல்களை அளிக்க மாட்டார் என நம்புகிறேன்" என பதிவிட்டுள்ளார்.