விசாரணைக்கு உத்தரவிட்ட முதல்வர் யோகி ஆதித்யநாத் 
இந்தியா

உதவி ஆசிரியர் தேர்வில் முதலிடம் பிடித்தவருக்கு குடியரசுத் தலைவர் யார் என்று தெரியவில்லை:  ‘வியாபம்’ போல் உ.பி.யிலும் வெடிக்கும் கல்வி ஊழல்- காங். தாக்கு

ஐஏஎன்எஸ்

தர்மேந்திர படேல், இவர் உத்தரப் பிரதேச உதவி ஆசிரியர்கள் தேர்வுக்கான பரீட்சையில் 95% மதிப்பெண் பெற்றார். ஆனால் இந்தியாவின் குடியரசுத் தலைவர் பெயர் அவருக்குத் தெரியாத அவலம் அம்பலமாகியுள்ளது.

இவரது பொது அறிவின்மை வெளிச்சத்துக்கு வந்தது எப்படியெனில் உதவி ஆசிரியர்கள் வேலையில் சேர்த்து விடுகிறேன் என்று கூறி லட்சக்கணக்கில் பலரிடம் மோசடி செய்ததாக பிராயாராஜ் போலீஸார் கைது செய்த 9 பேரில் தர்மேந்திர படேலும் ஒருவர். 69,000 உதவி ஆசிரியர்கள் பொறுப்புக்கு அங்கு தேர்வுகள் நடைபெற்றன.

இந்த தர்மேந்திர படேல் எப்படி 95% மார்க் எடுத்து டாப்பர் ஆனார் என்பது அங்கு பெரிய கேள்விக்குறியாகி தேர்வு நடைமுறைகளின் வெளிப்படைத் தன்மை மீது கடும் சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இவருடன் நல்ல மதிப்பெண் பெற்ற 3 பிறரும் கைது செய்யப்பட்டனர்.

இவர்களை விசாரித்த போது, “பொது அறிவு குறித்த அடிப்படை கேள்விகளுக்கே இவர்களிடம் பதில் இல்லை. இதன் மூலம் பணித்தேர்வு முறைகளில் முறைகேடு இருப்பது தெரிகிறது. இவர்களுக்கே ஒன்றும் தெரியவில்லை எனில் எப்படி மாணவர்களுக்கு இவர்களால் சொல்லிக்கொடுக்க முடியும்?, உதாரணமாக இந்தியாவின் குடியரசுத் தலைவர் யார் என்று தெரியவில்லை. என்று போலீஸ் அதிகாரி ஒருவர் அங்கலாய்த்தார்.

பிரக்யாராஜ் எஸ்.எஸ்.பி. சத்யார்த அனிரூத் பங்கஜ் கூற்றின்படி கே.எல்.படேல் என்ற முக்கியக் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்லார், இவர் முன்னாள் ஜில்லா பஞ்சாயத் உறுப்பினரும் ஆவார், இவரிடமிருந்து ரூ.22 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.

உ.பி.இயில் 37,339 உதவி ஆசிரியர்கள் பதவிக்கான நியமனங்களை பூர்த்தி செய்யுமாறு உச்ச நீதிமன்ரம் செவ்வாயன்று உ.பி. அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இதன் மூலம் இப்போது நடைபெற்று வரும் பணித்தேர்வு முறைகளை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.

ஒட்டுமொத்த பணிநியமனத் தேர்வு முறையை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே தடை செய்திருந்த நிலையில் மாநில அரசு இந்த முடிவை எதித்து வழக்குப் போட்டது.

இந்நிலையில் செவ்வாயன்று ஆசிரியர்கள் தேர்வு நியமன ஊழலை விசாரிக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் தனிப்படை விசாரணையை முடுக்கி விட்டுள்ளார்

இது தொடர்பாக உ.பி. அடிப்படை கல்வி அமைச்சர் சதீத் திவேதி கூறும்போது, “ராகுல் என்ற விண்ணப்பதாரர் தன்னிடம் லஞ்சம் பெற்றதாக போலீஸாரிடம் புகார் அளிக்க இந்த விவகாரம் வெடித்தது. பிராக்யாராஜ் போலீஸ் உடனே செயல்பட்டு கே.எல்.படேல் என்பவரைக் கைது செய்தனர். இவரோடு 9 பேரையும் கைது செய்தனர், அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது” என்றார்.

காங்கிரஸ் கட்சி இதனை மத்தியப் பிரதேச வியாபம் ஊழலுடன் ஒப்பிட்டுப் பேசியுள்ளது, மேலும் சிபிஐ விசாரணை தேவை என்று கோரியுள்ளது.

SCROLL FOR NEXT