இந்தியா

சீனாவின் கரோனா மையம் வூஹானையும் கடந்த மும்பை: கரோனா பாதிப்பு 51,100 ஆக அதிகரிப்பு

செய்திப்பிரிவு

கரோனா தோன்றிய சீனாவின் வூஹான் நகரை விட தற்போது மும்பையில் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. செவ்வாய் நிலவரப்படி மும்பையில் 51,100 பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இது வூஹானை விட 700 அதிகம்.

வூஹானில் 3869 பேர் மரணத்துடன் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 50,333 ஆக இருந்தது, மும்பையில் தற்போது 51,100 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்ட்ராவில் 90,000 கேஸ்கள் உள்ளன, இதுவும் சீனாவின் 84,000 கேஸ்கள் எண்ணிக்கையை கடந்துள்ளது.

மகாராஷ்ட்ராவில் 90,787 கேஸ்கள் உள்ளன. இதில் குணமடைந்த 42,368 பேர்களும் அடங்கும். கடந்த 24 மணி நேரத்தில் 2,259 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரேநாளில் 120 பேர் பலியாகி பலி எண்ணிக்கை 3,289 ஆக அதிகரித்துள்ளது.

மும்பையில் 51,100 பேருக்கு கரோனா, இதில் 1760 பேர் மும்பையில் மட்டும் பலியாகியுள்ளனர்.

SCROLL FOR NEXT