மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சக்தின் கீ்ழ் இயங்கும் பத்திரிகை தகவல் அலுவலகம்(பிஐபி) முதன்மை பொது இயக்குநர் கே.எஸ். தாட்வாலியாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர் நேற்று இரவு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி எய்ஸ்ம் மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள அவசர சிகிச்சைப் பிரிவில் நேற்று இரவு 7 மணிக்கு அனுமதிக்கப்பட்டார். ஆனால், இதுவரை அவரின் உடல்நிலை குறித்த எந்த தகவலும் மருத்துவமனை தரப்பிலிருந்து வெளியிடப்படவில்லை.
டெல்லியில் உள்ள தேசிய ஊடக மையம்(என்எம்சி)அமைந்திருக்கும் வளாகத்தில் பிஐபி அலுவலகம் அமைந்துள்ளது. தற்போது பிஐபி முதன்மை இயக்குநருக்கு கரோனா தொற்று இருப்பதால், அவரின் அலுவலகம் இன்று மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட உள்ளது.
நாளையும் அலுவலகம் மூடப்பட்டு, இயக்குநர் தாட்வாலியாவுடன் தொடர்புடைய அனைவரையும் கண்டறியும் சோதனை நடத்தப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன
என்எம்சி வளாக்தில் கிருமி நாசினி தெளி்ப்பு பணிகள் அனைத்தும் முடிவும் வரை பத்திரிகையாளர்கள் சந்திப்பு அனைத்தும் டெல்லியில் உள்ள சாஸ்திரி பவனில் நடக்கும் என மத்தியஅரசு தரப்பி்ல தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இயக்குநர் தாட்வாலியா மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், நரேந்திர சிங் தோமர் ஆகியோருடன் இணைந்து கலந்து கொண்டு, அமைச்சரவை முடிவுகளை அறிவித்தார்.
இப்போது தாட்வாலியாவுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால், மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், நரேந்திர சிங் தோமர் ஆகியோர் தனிமைப்படுத்திக்கொள்வார்களா அல்லது விலக்கு அளிக்கப்படுமா என்பது தெரியவில்லை