இந்தியா

தேர்தல் வெற்றிக்காக அலையும் அரசியல் கழுகுகள்: அமித் ஷா, பாஜக மீது தேஜஸ்வி யாதவ் கடும் தாக்கு 

செய்திப்பிரிவு

உலகிலேயே பணக்கார கட்சி பாஜக என்றும் ஆனால் அந்தக் கட்சிக்கு ஏழைகள் மீது இரக்கமில்லை என்றும் தாக்கிப் பேசிய ராஷ்ட்ரிய ஜனதாதளத் தலைவர் தேஜஸ்வி யாதவ் மீண்டும் பாஜகவையும் அமித் ஷாவையும் கடுமையாகத் தாக்கிப் பேசியுள்ளார்.

ஓராண்டு நிறைவையொட்டி மெய்நிகர் பேரணிகளை திட்டமிட்டுள்ள பாஜக பிஹாரில் தேர்தல் ஜுரம் பீடித்துள்ளதால் அரசியல் தலைவர்கள் அங்கு குழுமி கும்மியடிக்கும் நாட்களையும் பிஹார் மக்கள் ஆர்வத்துடனும் கவலையுடனும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் அமித் ஷா தலைமையில் பாஜக பேரணி நடத்தவிருக்கிறது. இதனையொட்டி தேஜஸ்வி யாதவ் கூறும்போது, “நாடு இதுவரையில்லாத நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது, கரோனா வைரஸ் தொற்றால் மக்கள் படாதபாடு பட்டு வருகின்றனர்.

இந்நேரத்தில் கூட பாஜக அமித் ஷா தலைமையில் பேரணி நடத்தவுள்ளது. மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாத தேர்தல் வெற்றிக்காகவும் பதவிக்காகவும் அலையும் அரசியல் கழுகுகள் என்பதை பாஜகவினர் நிரூபித்து வருகின்றனர்” என்று விமர்சித்தார்.

SCROLL FOR NEXT