டெல்லியில் நடந்த தப்லீக் ஜமாத் மாநாடு விவகாரத்தில் சிபிஐ விசா ரணை தேவை இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டெல்லி நிஜாமுதீன் பகுதியில் ‘தப்லீக் ஜமாத்’ மாநாடு கடந்த மார்ச் 13 முதல் 15-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் சவுதி அரேபியா, இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகள் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த முஸ்லிம் மதப் பிரச்சாரகர்கள் கலந்துகொண்டனர்.
வெளிநாடுகளை சேர்ந்த மதப் பிரச்சாரகர்கள் மூலம் மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பரவியது. மேலும், மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டி னர், பல்வேறு மாநிலங்களுக்கு சென்று மதப்பிரச்சாரத்திலும் ஈடு பட்டனர். இதனால் நாடு முழுவதும் வைரஸ் பரவல் அதிகரித்தது.
தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற பெரும்பாலான வெளிநாட்டி னர் சுற்றுலா விசாவில் இந்தியா வுக்கு வந்தவர்கள். சுற்றுலா விசா வில் வருபவர்கள் இதர நடவடிக்கைகளில் ஈடுபடுவது சட்டப்படி குற்றம் என்பதால், டெல்லி, உத்தர பிர தேசம், மத்திய பிரதேசம், மகா ராஷ்டிரா, பிஹார், கர்நாடகா, ஜார்க்கண்ட், தெலங்கானா, தமி ழகம் உட்பட பல்வேறு மாநிலங் களில் தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டினர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதற்கிடையே, உச்ச நீதிமன் றத்தில் ஜம்முவை சேர்ந்த வழக் கறிஞர் சுப்ரியா புதிதாக ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ‘தப்லீக் ஜமாத் மாநாட்டால் இந்தியர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு ள்ளது. அந்த மாநாட்டை நடத்த அனுமதி அளித்தது யார்? மத்திய அரசு, டெல்லி அரசு, டெல்லி போலீஸார் இதில் அலட்சியமாக செயல்பட்டுள்ளனர். எனவே இது குறித்த முழுமையான விவரங் களை அறிந்துகொள்ள சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண் டும்’ என்று கோரியிருந்தார்.
தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, நீதிபதிகள் போபண்ணா, ரிஷிகேஷ் ராய் அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
இந்நிலையில், வழக்கு தொடர் பாக மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
தப்லீக் ஜமாத்தாரின் (மதப் பிரச்சாரகர்கள்) தலைமையகமான ‘மர்கஸ்’ நிர்வாகத்தினரிடம் டெல்லி போலீஸார் கடந்த மார்ச் 21-ம் தேதி விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து, மார்ச் 24-ம் தேதி டெல்லி காவல் நிலையத்திலும் ‘மர்கஸ்’ நிர்வாகத்தினரிடம் விசா ரணை நடத்தப்பட்டது.
அதன் தலைவர் மவுலானா முகமதுசாத் மற்றும் அதன் நிர்வா கத்துக்கு சட்டப்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மாநாட்டில் பங்கேற்ற 2,960 வெளிநாட்டினர் 10 ஆண்டுகள் இந்தியாவில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாநாடு தொடர்பாக சட்டப்படி எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு தரப்பில் டெல்லி அரசுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வழக்கை விரைந்து முடிக்க திட்டமிட்டுள்ள னர். இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை இல்லை.
இவ்வாறு தெரிவித்துள்ளது.