இயற்கைப் பேரிடர், தொற்று நோய் களைத் தடுப்பதற்கு தேவையான அவசரகால முன்னேற்பாடு நட வடிக்கைகளுக்காக முதலீடு செய்யு மாறு தென்கிழக்காசிய நாடுகளை உலக சுகாதார அமைப்பு (டபிள்யூஹெச்ஓ) வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சுகாதாரக் கேடுகளை தடுப்பதும் அதை எதிர்கொள்வதும் உலக நாடுகளுக்கு பெரும் பிரச்சினை யாக உள்ளது. எனவே, இயற்கைப் பேரிடர், தொற்றுநோய், ரசாயனம் மற்றும் கதிரியக்கத்தின் விளைவாக ஏற்படும் நோய்களைத் தடுப் பதற்கு தேவையான அவசரகால முன்னேற்பாடு நடவடிக்கைகளுக் காக ஒவ்வொரு நாடும் முதலீடு செய்ய வேண்டும்.
குறிப்பாக, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இத்தகைய பாதிப்புகள் அதிகம் என்பதால் இந்த நாடுகள் அதிக கவனம் செலுத்த வேண்டும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தைமூர்-லெஸ்டியின் தலைநகர் திலியில் நடைபெற்ற 68-வது மண்டல குழு கூட்டத்தில், உலக சுகாதார அமைப்பின் மண்டல இயக்குநர் (தென்கிழக்காசியா) பூனம் கேத்ரபால் சிங் கூறியதாவது:
இயற்கைப் பேரிடர் சம்பவம் அடிக்கடி நிகழக்கூடிய பகுதியாக தென்கிழக்காசியா உள்ளது. இதுபோன்ற சம்பவத்தால் ஏற்படும் சுகாதார பாதிப்பைக் குறைப் பதற்கு தேவையான அவசரகால முன்னேற்பாடுகளை தயார் நிலையில் வைக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதாக ஒவ்வொரு சம்பவமும் அமைந்தன.
குறிப்பாக, சமீபத்தில் நேபாளத் தில் ஏற்பட்ட நிலநடுக்கம் அவசர கால முன்னேற்பாட்டை தயார் நிலையில் வைக்க வேண்டியதன் அவசியத்தை அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தியது. அவசரகால முன் னேற்பாடு நடவடிக்கையின் ஒரு பகுதியாக காத்மாண்டில் உள்ள மருத்துவமனையில் நவீன உபகர ணங்கள் பொருத்தப்பட்டிருந்த துடன் பயிற்சி பெற்ற மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டிருந்தனர். இத னால், நிலநடுக்கத்தால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க முடிந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
எஸ்ஏஆர்எஸ் (மூச்சுத் திண றல் நோய்), ஏவியன் இன்புளு யென்சா, 2004-ல் நிகழ்ந்த சுனாமி, அவ்வப்போது ஏற்படும் நிலநடுக்கங்கள், புயல், வெள்ளம் ஆகியவை தென்கிழக்காசியாவில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தின என்பது குறிப்பிடத் தக்கது.