இந்தியா

தமிழகத்தில் இருந்து கர்நாடகா வர தடை இல்லை: 14 நாட்கள் தனிமை தொடரும்

செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் மகாராஷ்டிரா, தமிழகம், குஜராத் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இருந்து கர்நாடகாவுக்குள் நுழைய ஜூன் 15 வரை தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த விதிமுறை தளர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கர்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து கர்நாடகா வருவதற்கு அனுமதி எதுவும் தேவையில்லை. அதேவேளையில் கர்நாடக அரசின் ‘சேவா சிந்து’ இணையதளத்தில் வருவதற்கான காரணம், தங்கும் இடம், தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். இதில் ஒப்புதல் கிடைக்காவிட்டாலும் கர்நாடகாவுக்கு காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை வரலாம்.

அவ்வாறு வருவோருக்கு 14 நாட்கள் கட்டாயம் அவர்களது வீடுகளிலே தனிமைப்படுத்துதல் இருக்கும். ஒருவேளை தங்கும் வசதி இல்லாதவர்கள் கர்நாடக அரசின் தனிமைப்படுத்தும் மையத்தில் 7 நாட்கள் தங்க வைக்கப்படுவார்கள். 10 வயதுக்குள் உள்ள குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா அறிகுறி தென்பட்டால் அரசின் தனிமைப்படுத்தல் மையத்தில் 7 நாட்கள் தங்கவைக்கப்படுவர்.

SCROLL FOR NEXT