அசாம் மாநிலத்தின் தெற்குப்பகுதியில் உள்ள பாரக் பள்ளத்தாக்கில் கடந்த இரு நாட்களாக பெய்த மிகக்கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 20 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
காச்சர், ஹெய்ல்கண்டி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் தலா 7 பேரும், கரீம்கஞ்ச் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 6 பேரும் உயிரிழந்தனர் என்றுஅதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதில் கடந்த இரு நாட்களாக பாரக் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள மாவட்டங்களில் மிககனமழை பெய்தது. ஹெய்ல்கண்டி மாவட்டம், போலோபஜார் அருகே அருக்கும் மோகன்பூரில் இன்று காலை 6 மணிக்கு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில் இரு குழந்தைகள், ஒரு பெண் உள்பட 7 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர், இருவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
அண்டை மாவட்டமான கரீம்கஞ்ச மாவட்டத்தில் இன்று அதிகாலை 3.30 மணி்க்கு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது இதில் ஒரு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 5 பேர் மண்ணில் புதையுண்டு உயிரிழந்தனர் .
இதைபோல காச்சர் மாவட்டத்தில்உள்ள கோலூபூர் கிராமத்தில் இன்று காலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர்.
நிலச்சரிவு குறித்து அறிந்ததும் மாநில பேரிடர் மீட்புப்படையினர், தீயணைப்பு படையினர் 3இடங்களுக்கும் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இந்த மூன்று சம்பவங்களிலும் 7 பேர் காயமடைந்து 3 மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
நிலச்சரி்வு குறித்து அறிந்த முதல்வர் சர்பானந்த சோனாவால், உயிிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் சோனாவால் ட்விட்டரி்ல் வெளியிட்ட இரங்கல் செய்தியில் “ பாரக் பள்ளத்தாக்கில்அமைந்துள்ள மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 20 பேர் உயிரிழந்தது ஆழ்ந்த வேதனையைத் தருகிறது. காச்சர், ஹெய்ல்கண்டி, கரீம்கஞ்ச் மாவட்ட நிர்வாகம் துரிதமாக மீட்புப்பணியை மேற்கொள்ள உத்தரவி்ட்டுள்ளேன்.
அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மருத்துவ சிகி்ச்சையும் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவி்ட்டுள்ளேன். நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களி்ன் குடும்பத்தாருக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் அரசு சார்பில் வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்