ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டுமென்ற கோரிக்கை தற்போது வலுத்து வருகிறது. இந்நிலையில், நேற்று காலை நெல்லூர் அடுத்துள்ள வேதய்ய பாளையம் கேசவ நகரை சேர்ந்த அரசு ஒப்பந்த ஊழியர் ராமிஷெட்டி லட்சுமய்யா (55) என்பவர், தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ராமிஷெட்டி லட்சுமய்யா எழுதிய கடிதத்தில், ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கட்டாயமாக வழங்க வேண்டும். மாநிலம் வளர்ச்சி அடைய வேண்டும். வேலையில்லா திண்டாட்டம் தீர வேண்டும். இதுவே எனது மரண வாக்கு மூலம்” என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து போலீஸார் லட்சுமய்யா உடலை பிரேத பரிசோதனைக்காக நெல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதேபோன்று, மேற்கு கோதாவரி மாவட்டம், சிந்தலபுடி கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் (31) என்பவரும் நேற்று சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.