மாநிலத்தின் வரிவருவாய் வெகுவாகக் குறைந்துவிட்டதால், ஊழியர்களுக்கு ஊதியம் தருவதற்கும், அலுவலகச் செலவுகளை சமாளிக்கவும் உடனடியாக ரூ.5 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்க வேண்டும் என்று மத்திய அ ரசுக்கு டெல்லி மாநில ஆம்ஆத்மி அரசு கோரி்க்கை விடுத்துள்ளது.
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த மார்ச் 25-ம் தேதியிலிருந்து நாடுமுழுவதும் ஊரடங்கு கொண்டுவரப்பட்டது. 4 கட்ட ஊரடங்கு செயல்படுத்தப்பட்டு நாளையுடன் முடிகிறது.
ஜூன் 30-ம் தேதிவரை ஊரடங்கு தளர்வுகளுடன் நீட்டிகப்பட்டுள்ளது. கடந்த இரு மாதங்களாக டெல்லியில் எந்த விதமான தொழிற்சாலை, கடைகள், வர்த்தக நிறுவனங்கள் இயங்காகததால் வரி வசூல் படுமோசமாக வீழ்ச்சி அடைந்துவிட்டது. கடந்த ஆண்டு ஏப்ரல் மே மாதங்களோடு டெல்லி அரசின் வரிவருவாயைப் ஒப்பிட்டால் அதிலிருந்து 80 சதவீதம் வரி குறைந்துள்ளது. கடந்தஇரு மாதங்களாக மாதத்துக்கு ரூ.500 கோடி மட்டுமே வசூலாகியுள்ளது
ஆனால் கரோனா வைரஸ் டெல்லியில் தீவிரமாக இருக்கும் இந்நேரத்தில் மாநிலத்தில ஊழியர்களுக்கு ஊதியத்துக்காக மட்டும் ரூ.3,500 கோடி தேவைப்படுகிறது. இதில் அலுவலகச் செலவும் இருக்கிறது.
இந்த சூழலில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மத்தியஅ ரசுக்கு ட்விட்டரில் விடுத்த கோரிக்கையில் “ பேரிடாரன இந்த இந்த நேரத்தில் டெல்லி மக்களுக்கு நிதியுதவி தந்துமத்திய அரசு உதவ வேண்டும்” என கோரிக்கை விடுத்திருந்தார்
டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவும் காணொலி வாயிலாக இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் “கரோனா வைரஸ் லாக்டவுனால் நாட்டின் பொருளாதாரம் மட்டுமின்றி டெல்லியின் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
டெல்லி மாநில அரசில் பணியாற்றும் ஊழியர்களுக்காகவும், அலுவலகச் செலவுக்காகவும் உடனடியாக ரூ.3500 கோடி தேவைப்படுகிறது. கரோனா வைரஸால் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் டெல்லியில் வரி வசூல் 85 சதவீதம் குறைந்துவி்ட்டது.
இதனால் மத்திய அரசு உடனடியாக டெல்லி அரசுக்கு ரூ.5000 கோடி நிதியுதவி வழங்க வேண்டும் எனக் கோரி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளேன். பேரிடர் நிவாரண நிதியில் டெல்லி அரசு இதுவரை ஏதும் பெறவில்லை. மற்ற மாநிலங்களுக்கு கிடைத்தன, ஆனால் டெல்லிக்கு இல்லாததால் பெரும் நிதிநெருக்கடியில் இருக்கிறது
இப்போது இருக்கும் மிகப்பெரிய பிரச்சினை ஊழியர்களுக்கு எவ்வாறு ஊதியம் தருவது என்பதுதான் ஆதலால், உடனடியாக ரூ.5 ஆயிரம் கோடியை கேட்டுள்ளோம். கரோனா காலத்தில் முன்களப்பணியாளர்கள், அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க குறைந்தபட்சம் ரூ 7 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது. கடந்த இரு மாதங்களில் வரி வருவாயாக ரூ.1,775 கோடி வந்துள்ளது” எனத் தெரிவி்த்தார்