இந்தியா

வலிமையான இந்தியாவை உருவாக்க அமித் ஷா அழைப்பு

செய்திப்பிரிவு

நாட்டின் 69வது சுதந்திர தினமான நேற்று பாரதிய ஜனதா கட்சி தலைமையகத்தில் கொடியேற்றி உரை நிகழ்த்திய கட்சித் தலைவர் அமித் ஷா, ‘மோடி தலைமையின் கீழ் புதிய, வலிமையான இந்தியாவை உருவாக்குவோம்' என கட்சித் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தனது உரையில் அவர் மேலும் கூறியதாவது:

பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் புதிய, வலிமையான இந்தியாவை உருவாக்க, நாம் மீண்டும் ஒருமுறை நம்மை நாமே அர்ப்பணித்துக் கொள் வோம். தோளோடு தோள் நின்று இணைந்து பணியாற்று வோம்.

இந்தத் தருணத்தில் நாட்டின் சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட அனைவரையும் வணங்குகிறேன். அவர்களின் பங்களிப்பால்தான் இன்று நமது தேசியக் கொடி உயரப் பறக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT