கோப்புப்படம் 
இந்தியா

மம்தா பானர்ஜி அமைச்சரவையில் முக்கிய அமைச்சர், அவரின் மனைவிக்கு கரோனா தொற்று

பிடிஐ

மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள மூத்த அமைச்சர் ஒருவருக்கும் அவரின் மனைவி, வீ்ட்டில் பணிபுரியும் பணிப்பெண் ஆகியோருக்கு கரோனா இருப்பது உறுதியாகியுள்ளது

முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான அமைச்சரவையில் தீயணைப்பு மற்றும் அவசர சேவைத்துறை அமைச்சராக இருப்பவர் சுஜித் போஸ். பிதான்நகர் தொகுதி திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏவான சுஜித் போஸுக்கு கடந்த இரு நாட்களாக கரோனா வைரஸ் அறிகுறிகள் இருந்தது கண்டறியப்பட்டு அவருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது

இதில் அமைச்சர் சுஜித் போஸுக்கு கரோனா வைரஸ்பாதிப்பு இருப்பது உறுதியானது.

முன்னதாக அமைச்சர் வீட்டில் பணிபுரியும் பணிப்பெண்ணுக்கு கரோனோனாவில் பாதிக்கப்பட்டார். இந்த தகவலைஅறிந்து அமைச்சர் சஜித் போஸ், அவரின் மனைவி இருவுக்கும் அறிகுறிகள் லேசாக இருந்ததால் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் இருவருக்கும் கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, மூவரும் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர், வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேற்கு வங்கத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த24 மணி நேரத்தில் அந்த மாநிலத்தில் 344 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,536 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 295 பேராக உயர்ந்துள்ளது

கடந்த 24 மணிநேரத்தில் 6 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.இதில் 3 பேர் கொல்கத்தாவிலும்,மீதமுள்ள 3 பேர் மற்ற மாவட்டங்களிலும் நடந்துள்ளது.

கடந்த சில நாட்களாக மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களிலும் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படத்தொடங்கியுள்ளது.ஏறக்குறைய 22 மாவட்டங்களில் 16 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதில் கொல்க்கத்தாவில் 87, ஹவுராவில் 55, நார்த் 24 பர்கானாவில் 49 பேர் நேற்று பாதிக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT