புலம்பெயர் தொழிலாளர்கள் பசி, பட்டினியுடன் சைக்கிள்களிலும் கால்நடையாகவும் நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர்கள் நடந்து தங்கள் சொந்த முயற்சியில் ஊர் வந்து சேர்ந்தாலும் மாநில அரசு தனிமை முகாம் மீது விமர்சனம் வைத்து விடக் கூடாது, அப்படி விமர்சனம் வைத்தால், கைது, வழக்கைச் சந்திக்க வேண்டிவரும்.
இந்நிலைமைகளுக்கு உதாரணமாக பஞ்சாபிலிருந்து பிஹார் மாநிலம் மாதேபுரத்திற்கு சைக்கிளிலும், கால்நடையாகவும் வந்து சேர்ந்த 9 புலம் பெயர் தொழிலாளர்கள் பிஹார் அரசு தனிமை மையத்தில் வசதிகள் இல்லை என்று விமர்சித்து விட்டனர்.
இதனையடுத்து இந்திய தண்டனை சட்டம் 188-ம் பிரிவின் கீழ் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் வசதியில்லாத தனிமை மையத்திலிருந்து வேறு மையத்துக்குச் சென்றனர், இதற்கு ‘அதிகாரிகளிடம் அனுமதி பெறவில்லை’ என்ற குற்றச்சாட்டல் இவர்கள் கைது நடவடிக்கையையும் தற்போது எதிர்கொண்டு வருகின்றனர்.
மனோஜ் மூக்கையா என்ற தொழிலாளர் கூறும்போது, “மே 17ம் தேதி ஸ்க்ரீனிங் முடிந்த நிலையில் குமர்கந்த்தில் உள்ள அதிகாரிகள் ராம்நகர் மாகேஷில் உள்ள பள்ளியை எங்கல் 3 பேருக்கு ஒதுக்கினர், அடுத்த 2 நாட்களில் மேலும் 6 பேர் வந்தனர். தண்ணீர், மின்சாரம் எதுவும் அங்கு இல்லை.” என்றார். இதனையடுத்து மே 19ம் தேதி தனிமை மையத்தை வீடியோ பிடித்தனர். இதுதான் அதிகாரிகளை எரிச்சலடையச் செய்தது.
வழக்கு தொடரப்பட்ட 6 தொழிலாளர்கள் கூறும்போது, எந்த ஒர் அரசு தனிமை மையத்திலும் தங்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர் என்றனர்.
இன்னொரு புலம்பெயர் தொழிலாளி கூறும்போது, “எங்கள் மீது எஃப்.ஐ.ஆர். நாங்களே மையத்தை தேர்ந்தெடுத்ததற்காக அல்ல நாங்கள் தனிமை மையத்தின் மோசமான நிலையை படம் எடுத்துவிட்டோம் அதற்காகத்தான்” என்றார்.
இவர்கள் மாறிய தனிமை மையம் அரசு அங்கீகரித்த தனிமை மையம்தான் எனவே இவர்கள் மீது வழக்குத் தொடர்வது அநீதி என்று ராம்நகர் கிராமத்தலைவர் ராம்தோனியா தேவி வேதனை தெரிவித்தார்.
மேலும் இதில் வசதிகள் இல்லை என்பதற்காக ‘பட்டினிப் போராட்டத்தை பிற தனிமைவாசிகளையும் தூண்டியதாக’ வழக்கு தொடரப்பட்டுள்ளது.