இந்தியா

வீர சாவர்க்கரின் துணிவிற்கு தலை வணங்குகிறேன்: பிரதமர் மோடி புகழாரம்

செய்திப்பிரிவு

வீர சாவர்க்கரின் பிறந்த நாளில் அவரது துணிவிற்கு தலை வணங்குகிறேன் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

வீர சாவர்க்கரின் பிறந்த நாளான இன்று அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் செலுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் “வீர சாவர்க்கரின் பிறந்த நாளில் அவரது துணிவிற்கு நான் தலை வணங்குகிறேன்.

அவரது துணிச்சல், சுதந்திர போராட்டத்தில் பலரும் இணைய அவர் அளித்த ஊக்கம், சமூக சீர்திருத்தத்தை வலியுறுத்திய பண்பு ஆகியவற்றுக்காக அவரை நாம் நினைவு கூர்கிறோம்” என்று பிரதமர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வீடியோ பதிவு ஒன்றையும் பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.

அதில் வீர சாவர்க்கரின் சாதனைகளையும், சுதந்திரத்திற்கு ஆற்றிய பணிகளையும் பிரதமர் மோடி விவரித்துள்ளார்.

SCROLL FOR NEXT