கோப்புப் படம் 
இந்தியா

பெங்களூருவில் சூறை காற்றுடன் மழை- நூற்றுக்கணக்கான மரங்கள் சாய்ந்தன‌

செய்திப்பிரிவு

பெங்களூருவில் கடந்த இரு வாரங் களாக அவ்வப்போது இரவில் மிதமான மழை பெய்து வந்தது. இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக பகலில் பலத்த சூறை காற்றுடன் கனமழை பெய்தது.

இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பீன்யா, யஷ்வந்த்பூர், ஹென்னூர், கிருஷ்ணராஜபுரம், மாரத்தஹள்ளி, கெங்கேரி உள்ளிட்ட இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் நூற்றுக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறும் நிலைக்கு ஆளாகினர். சூறை காற்றுடன் பெய்த மழையால் சாலையோரங் களிலும் பூங்காக்களிலும் இருந்த நூற்றுக்கணக்கான மரங்கள் சாய்ந் தன. 30-க்கும் மேற்பட்ட மின்கம்பங் களும் சாய்ந்ததால் மின்சாரம் உடனடியாக துண்டிக்கப்பட்டது. பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து சாலைகளில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாலை வேளையில் தொடரும் கனமழையால் அலுவலகம் முடிந்து வீடு திரும்புவோர் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளன‌ர்.

SCROLL FOR NEXT