வயலின் மேதையும் இசைக்கலைஞருமான எல்.சுப்ரமணியம் ‘வசுதெய்வ குடும்பகம்’என்ற தலைப்பில் இசைக்கோர்வை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை இந்தியாவுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் அர்ப்பணித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த இசைக்கோர்வை எனும் சிம்பனியை லண்டன் சிம்பனி ஆர்க்கெஸ்ட்ராவுடன் சேர்ந்து உருவாக்கியுள்ளார், இதில் பண்டிட் ஜஸ்ராஜ், பிர்ஜு மஹராஜ் போன்ற இசை மேதைகள் பங்களிப்பு செய்துள்ளனர்.
இதனை பிரதமருக்கு அர்ப்பணிப்பதாக எல்.சுப்ரமணியம் மேற்கொண்ட ட்வீட் பதிவுக்கு பிரதமர் மோடி பதிலுக்கு பிரமாதமான இசையமைப்பு என்று பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.
மோடி தன் ட்வீட்டில், “வசுதெய்வ குடும்பகம் (உலகம் ஒரு குடும்பம்) தன் செய்தியை நன்றாக எடுத்துரைக்கிறது. இதில் பங்கேற்றவர்களின் அபாரமான முயற்சி” என்று பாராட்டியுள்ளார்.
சுப்ரமணியம் தன் ட்வீட்டில், “நான் பாரத் சிம்பனி- வசுதெய்வ குடும்பகம் என்பதை லண்டன் சிம்பனி ஆர்கெஸ்ட்ரா மற்றும் இசை மேதைகளான பண்டிட் ஜெஸ்ராஜ், பண்டிட் பிர்ஜு மஹராஜ், பெகம் பர்வீன் சுல்தானா, கே.ஜே. ஏசுதாஸ், எஸ்பிபி, கவிதா ஆகியோருடன் இனைந்து உருவாக்கி வெளியிட்டுள்ளேன், இதனி நாட்டுப் பிரதமர் மோடிக்கும் நாட்டுக்கும் அர்ப்பணிக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.