கரோனா வைரஸ் பரவல் தொடர்பாக சர்ச்சைகளை உருவாக்கி வரும் தப்லீகி ஜமாத் வழக்கு தொடர்பாக 83 அயல்நாட்டினர் மீது டெல்லி போலீஸார் 20 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்போவதாக டெல்லி போலீஸாருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த மாதத் தொடக்கத்தில் தப்லீக் ஜமாத் உறுப்பினர்கள் 700 பேரின் ஆவணங்களை போலீஸார் கைப்பற்றினர். இதில் பாஸ்போர்ட் உள்ளிட்டவை அடங்கும்.
இந்த தப்லீக் ஜமாத் உறுப்பினர்கள் அனைவரும் நிஜாமுத்தீன் மர்காஸில் மத நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 5ம் தேதியன்று டெல்லி குற்றப்பிரிவு போலீஸ் பிரிவு தப்லீக் ஜமாத் தலைவர் மவுலானா சாத்தின் மகனை விசாரித்தனர். அப்போது ஜமாத் மத நிகழ்வில் கலந்து கொண்ட 20 பேர் குறித்த விவரங்களைப் போலீஸார் கோரினர்.
முன்னதாக தப்லீக் ஜமாத் தலைவர் மற்றும் மாநாட்டில் கலந்து கொண்ட பிறர் மீது முதல் தகவலறிக்கை பதியப்பட்டது. இவர்கள் மீது தொற்று நோய்ச்சட்டம், 1897-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நிஜமுத்தீன் பகுதி இந்த மத நிகழ்வுக்குப் பிறகு கரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறியது குறிப்பிடத்தக்கது.