இந்தியா

காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைப்பகுதியில் பாக். ராணுவம் தாக்குதல்- இந்தியா பதிலடி

பிடிஐ

ஜம்மு காஷ்மீர் ரஜவ்ரி மாவட்டத்தில் கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டுப் பகுதியருகே செவ்வாயன்று பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு மற்றும் ஷெல் வீச்சுத் தாக்குதல்களில் ஈடுபட்டது.

இந்தத் தாக்குதலுக்கு இந்திய ராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்ததாக பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பாகிஸ்தான் ராணுவம் எவ்விதக் காரணமும் இல்லாமல் பூஞ்ச் மாவட்டத்தின் கட்டுப்பாட்டு எல்லைப் பகுதியில் பாலகோட் செக்டாரில் சண்டை நிறுத்தத்தை மீறி செவ்வாய்க்கிழமை காலையில் தாக்குதலில் ஈடுபட்டது. இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்தது.

இந்தச் செய்தி வரும் போது கூட எல்லைத்தாண்டிய தாக்குதல் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால் இருதரப்பு தாக்குதலிலும் உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை.

SCROLL FOR NEXT