இந்தியா

கரோனா வைரஸ் பாதிப்பில் ஈரானைக் கடந்தது இந்தியா : உலக அளவில் அதிக பாதிப்பில் 10வது இடம்

செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் என்ற தொற்று உலகை பெரிய அளவில் அச்சுறுத்தி வருகிறது இதன் பாதிப்பிலிருந்து தப்பிய நாடுகள் குறைவு, அப்படியே தப்பித்தாலும் அது நிரந்தரமல்ல, எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் கரோனா பரவலாம் என்ற நிலையே நீடித்து வருகிறது.

ஹைட்ராக்சிகுளோரோகுயின் சரிப்பட்டு வராது என்று லான்செட் ஆய்வு தெரிவிக்கிறது, ரெம்டெசிவரி மருந்தினால் ஏகப்பட்ட பக்கவிளைவுகள், இருதய துடிப்பில் ஏற்ற இறக்கங்கள் கொண்ட சீரற்ற தன்மை, ரத்தநாள பிரச்சினைகள் ஆகியவை ரிப்போர்ட் ஆகியுள்ளன.

இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,977 கரோனா தொற்றுக்கள் ஏற்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை4,021 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கரோனா வைரஸ் கிருமி தொற்று எண்ணிக்கை 1,38,845 ஆக அதிகரித்துள்ள நிலையில் ஈரான் கரோனா பாதிப்பையும் முந்திய இந்தியா கரோனா பாதிப்பில் 10ம் இடத்துக்கு முன்னேறியுள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.

ஆயுர்வேத மருந்துகளைக் கொடுத்து கோவிட்19 நோயாளிகளுக்கு அளித்த சிகிச்சையின் பயன்கள் என்ன என்று மத்திய சுகாதார அமைச்சகம் முடிவுகளைக் கேட்டுள்ளது.

SCROLL FOR NEXT