இளைஞர் தற்கொலையை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி. எஸ்.சர்மா. 
இந்தியா

ரீசார்ஜ் செய்ய மாட்டோம் என மறுத்த பெற்றோர்: விரக்தியில் 20 வயது இளைஞர் தற்கொலை

ஏஎன்ஐ

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் 20 வயது இளைஞர் ஒருவர் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார்.

இப்போதெல்லாம் குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் மொபைல் போன் மூலம்தான் உலக நடப்பை அறிந்து கொள்கின்றனர் இதோடு பெரிய பொழுதுபோக்கு கருவியாகவும் மொபைல் போன் மாறிவிட்டது.

அதே வேளையில் இளம் வயதில் தறிகெட்டு தவறான வழியில் செல்வதற்கும் இந்த மொபைல் போன்கள் காரணமாக உள்ளன. இதனையடுத்து பெற்றோர்கள் குழந்தைகள் மீது அதீதமாக கண்காணிப்பு செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இணையதள இணைப்புக்காக தன் மொபைலுக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்று போபாலைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தன் பெற்றோரிடம் கேட்க அவர்கள் மறுத்துள்ளனர், இதனையடுத்து அந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இது தொடர்பாக போபால் காவல்நிலையம் ஒன்றின் நிலைய அதிகாரி எஸ்.ஷர்மா, ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, “தன் பெற்றோரிடம் ரீசார்ஜ் செய்து தரக்கோரி அடிக்கடி தொந்தரவு செய்துள்ளார். அவர்கள் மறுத்தனர். ஏன் மறுத்தனர் என்று தெரியவில்லை, இதன் வெறுப்பில் பையன் தற்கொலை செய்து கொண்டார்”

இது தொடர்பாக விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளதால் விசாரணைக்குப் பிறகுதன தற்கொலைக்கான காரணம் தெரியவரும்.

SCROLL FOR NEXT