கரோனா வைரஸ் தொற்று பிரச்சினையை கட்டுக்குள் கொண்டுவர புதுமை வழிகளை கண்டுபிடித்து முன்னணி வகிக்கிறது கேரளா. இனி இதுபோன்ற எந்த நெருக்கடி வந்தாலும் அவற்றை இந்த மாநிலம் சமாளித்து நிற்கும் என்றார் முதல்வர் பினராயி விஜயன்.
ட்விட்டர் இந்தியா சார்பில் நேற்று நடந்த 'ஆஸ்க் தி சிஎம்'(#ASKTHECM) என்ற நிகழ்ச்சியில் கேரள முதல்வர் பினராயி விஜயன்பேசும்போது, "கரோனா வைரஸ்தொற்று பிரச்சினையை எதிர்கொண்டு சமாளிக்க புதிய வழிமுறைகளை கண்டறிந்து செயல்படுத்துவதில் கேரளா முன்னிலைவகிக்கிறது. கரோனா வைரஸ்தொற்று நோயாளிகள் என இப்போது உறுதிப்படுத்தப்படுபவர்கள் இந்த மாநிலத்துக்கு வெளியிலிருந்து வந்துள்ளவர்கள். அவர்களை அன்னியப்படுத்திவிடமுடியாது. அவர்களுக்கும் சொந்தமானது இந்த மாநிலம்" என்றார்.
இந்நிகழ்ச்சியில், வெளிநாடுகளிலிருந்து கேரளத்தவர் ஊர் திரும்புவது, அவர்களின் வேலைவாய்ப்பு பிரச்சினை, இனி வரவுள்ள பருவமழை காலம், பருவநிலை மாற்றம், தேசிய பேரிடருக்கான வாய்ப்புகள் போன்றவை தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முதல்வர் விஜயன் பதில் அளித்தார்.