மே 16ம் தேதி வாக்கில் இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஜீரோவாகக் குறையும் என்று தெரிவித்தது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு, விளக்கமளிக்கப்பட்டது என்று நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.
அரசின் கோவிட்-19 கமிட்டியின் தலைவரான வி.கே.பால் கூறும்போது, “ஒரு குறிப்பிட்ட தேதியில் கரோனா தொற்று பூஜ்ஜியமாகும் என்று யாரும் கூறவேயில்லை. தவறான புரிதல், அது சரிசெய்யப்பட வேண்டும், தவறனா புரிதலுக்கு நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” என்று அவர் செய்தியாளர் கேள்விக்குப் பதில் அளிக்கும் போது தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் 24ம் தேதி தி இந்து ஆங்கிலம் நாளிதழில் லாக்டவுன் உள்ளிட்ட நடைமுறைகளினால் கரோனா தாக்கம் பற்றி விரிவாக விளக்கம் அளித்தா டாக்டர் வி.கே.பால். அதன் மே 16ம் தேதி வாக்கில் கரோனா வைரஸ் படிப்படியாகக் குறையும் என்றார்.
ஆனால் இப்போது பொதுவெளியில் முதல் முதலாக டாக்டர் பால் இந்த விஷயத்தை அங்கீகரித்தார். முதல் லாக் டவுனினால் இந்தியா 1 லட்சம் கரோனா கேஸ்கள் இல்லாமல் தப்பியது, மேலும் மற்றவருக்கு தொற்றும் விகிதம் குறைந்தது என்றும் கேஸ்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் வேகமும் 10 நாட்கள் என்று அதிரித்திருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார், இது பவர் பாயிண்ட் கணிப்பு என்பதால் லாக் டவுன் நீட்டிப்பால் விளையும் பயன்கள் பற்றியதே.
டாக்டர் வி.கே.பால் உண்மையில் கரோனா தொற்று சுத்தமாக இல்லாமல் பூஜ்ஜியமாகிவிடும் என்று கூறவில்லை. இவர் அன்று விவரித்த விஷயங்கள் யூடியூபில் உள்ளது, அதில் கரோனா தொற்று அதிரிப்பு குறையும் என்று கூறியிருந்தார். மே 3ம் தேதி முதல் தினசரி 1500 கேஸ்கள் வீதம் அதிகரித்து மே 12ம் தேதி வாக்கில் ஆயிரம் கேஸ்களாகக் குறைந்து மே 16-ல் ஜீரோவாகும் என்றார். அதாவது இந்த வரைபடம் கூறுகிறது எனத் தெரிவித்தார்.
பூஜ்ஜியமாகும் என்ற இவரது கணிப்பாக வெளியான கருத்து பரவலான விமர்சனங்களை ஈர்த்தது. சமூகவலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இந்த வரைபடத்தின் மின்னணு நகல்களில் மே 16 வாக்கில் புதிய கேஸ்கள் ஜீரோவாகும் என்பது இனி காணக்கிடைக்காது.